Friday, February 24, 2012


உன் வார்த்தைகள் என்னை
உயிரோடு கொன்றாலும்
நான் அந்த வார்த்தைகளை
மறக்க நினைப்பதில்லை
உன்னை கடைசி வரை
நான் மறக்காமல் வாழ

நீ என்னை நிஜமாக விரும்பாத
போதும் நான் உன்னை
விரும்புகிறேன் வார்த்தையில்
ஆவது என்னை நீ விரும்பி
சென்றாயே என்பதற்காக .......

என்னை பல உறவுகள் வெறுத்த
போதும் வலிக்கவில்லை உறவே
இல்லாமல் என்னில் காதல்
செய்து உன் நாமத்தில் என்
உயிரை வாழ வைத்த நீ
வெறுக்கும் போது உயிரே
வெறுக்குதடா என்னை

சோகமே இன்று என் சொந்தமாகி
என் கவிதையே என்னை
தாலாட்டி என் கண்ணீர் மட்டும்
என்னை விட்டு பிரியாமல்
எனக்கு ஆறுதலாய் ......

உன் நாமத்தில் நீ எனக்கு
தந்த உயிர் உன்
நினைவுகளோடு காலமெல்லாம்
வாழும் நீண்ட ஆயுளோடு

என் ஆயுள் இறுதியில் ஆவது
ஒரு நொடி என் முன் வந்து
விடு உன் முகம் பார்த்து
நான் மரணிக்க வேண்டும்
v.m.j.gowsi

எந்நிலை மறந்து
உன்னை நேசம் செய்தேன்
இன்று உன்னாலே எந்நிலை
உணர்ந்து பிரியமுடன் பிரிந்து
விட்டேன் v.m.j.gowsi

உன்னை காணவில்லை
ஏங்கி ஏங்கியே இரவுகள்
விடிந்து விட்டது விடிந்த
பின்பு தான் சிந்திப்பேன்
தூங்கி இருந்தால் கனவில்
ஆவது உன்னை நான்
சந்திதிருப்பேனே என்று
v.m.j.gowsi

Thursday, February 23, 2012

மரணவலி


என் மனதை அறிய முடியாத
உன் மனது
என் காதலை புரிய முடியாத
உன் வார்த்தை
இரண்டும் எனக்குள் மரணவலியை
தந்து செல்கிறது v.m.j.gowsi

உணர்ந்தேன் உன்னாலே


விடை தெரியாத வினாவாக
என் உணர்வுகளோடு என்
கவிதையில் வாழ்ந்து விட்டு
போகட்டும் என் காதல்
நிஜங்கள் இல்லாத எதுகும்
நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
உன்னாலே
v.m.j.gowsi

ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?


உரிமையுள்ள உறவென்றால் நான்
விலகிய போதும் என்னிடம்
நீ எனக்ககா வந்திருப்பாய்
உன் உள்ளம் என்றும் அறியும்
உன்மீது நான் கொண்ட உயிர்
காதலை .....ஆனால் நீ விலகி
வலி கொடுத்து விட்டாய் உணர்வற்ற
ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?
என்னை ......
v.m.j.gowsi

வஞ்சித்து விட்டாயே


உறவுகள் எல்லாம் என்னை
வார்த்தையால் வஞ்சித்தவேளை
நீ மட்டும் வார்த்தையால் அன்பை
தந்தாயே....உன் அன்பொன்றே
உலகம் உன் வார்த்தையே சத்தியம்
என்று வாழ்ந்தேனே நீயும்
வார்த்தையால் வஞ்சித்து விட்டாயேv.m.j.gowsi

விலகி விட்டோம்


நீ காதலால் எனக்குள் உயிரானாய்
கவிதையால் எனக்குள் உணர்வானாய்
உறவுகள் நம்மை தூரம் வைத்த போதும்
அன்பால் உன்னருகில் வந்தவள் நானடா
இன்று எங்கே சென்றது நம் நேசம் ஒருவரை
ஒருவர் விலகி விட்டோம் v.m.j.gowsi

பிரியமாய் இருந்தவள்


பிரியமாய் இருந்தவள் நான்
இன்று பிரிய மனமின்றி
பிரிந்து விட்டேன் உன் வார்த்தையால்
என் வலி உனக்காக என்பதை நீ
அறிந்தால் இல்லை உணர்ந்தால்
எனக்காக என் உள்ளம் விரும்புபவனாய்
வந்துவிடு என்னிடம்.........v.m.j.gowsi

அறியாதவனாய்


உன் வார்த்தைகளின் வலியை
கூட தாங்கும் இவள் நெஞ்சம்
உன் வார்த்தையில் பொய்களை
தங்காது என்று நீ அறிந்தும்
ஏன் அறியாதவனாய் ?v.m.j.gowsi

என் உயிரே


உயிர் தந்தவனும் நீ
உயிரை பறித்தவனும் நீ
உன்னாலே உள்ளம் உடைந்து
உணர்வு இழந்து வாழ்கிறேன்
என் உயிரே v.m.j.gowsi

உன்னோடுதான்


விட்டு சென்று விலகி வாழ்வது
நான் மட்டுமே என் மனம் இல்லை
என்னுயிரே .....என் உள்ளம் என்றும்
உன்னோடுதான் v.m.j.gowsi

வலியை கொடுத்தாய்


கடவுளும் கண்களுக்கு தெரிவதில்லை
காதலும் கண்களுக்கு தெரிவதில்லை
மரணமும் கண்களுக்கு தெரிவதில்லை
என்னவனே நீ மட்டும் ஏன் என் கண்களுக்கு
வலியை கொடுத்தாய்.....
கண்களுக்கு தெரிய மரணத்தை நான்
சுவாசிக்கவா ?♥ v.m.j.gowsi

Wednesday, February 22, 2012

என்னவனே


படைத்தவன் என் விதியை தவறாக
எழுதிவிடான் ஆனாலும் .....
உனக்காக ஏங்கி உன்னை நேசித்த
ஆத்மா திருப்தியோடு நான்
வாழ்ந்துவிட்டு போகிறேன் என்னவனே
v.m.j.gowsi

பாசம் என்பது உணர்ச்சியின்
உச்சகட்டம் கண்ணீராய்
என்னவனே என் பாசம்
உனக்காக மட்டுமே
கண்ணீர் வடிக்கிறது
புரிந்துகொள் இல்லை
என்றால் மரணிக்க விடு v.m.j.gowsi

உயிரில் அடக்கம்


உணர்வுகளை உயிரில் அடக்கம்
செய்தவளாய்
கற்பனையில் தொடர்ந்து கொண்டு
போகிறது என் காதல் நீ என்னுள்
என்றும் நினைவாய் வாழ்வதால்
v.m.j.gowsi

உயிர் நேசம்


என் உயிர் நேசம் உன் பாசம்
என்று எண்ணினேன்
நீ உணர்த்திவிட்டாய்
உன் உலகம் வேறு என் உலகம்
வேறு என்று நான் என்
உலகத்தை விட்டு வெளி வர
வழி தெரியா முட்டாள் மாற்றான்
வீட்டு மல்லிகை என்றும்
மணம் வீசாது v.m.j.gowsi

வெறுத்துவிட கூடாது


எனக்காக நீ தந்த கண்ணீரை விட
எனக்காக நீ தந்த சந்தோசத்தையே
என் நினைவில் நிறுத்தி உணர்வில்
கலக்கிறேன் என் நினைவுகள்
கூட உன்னை ஒருபோதும் வெறுத்துவிட
கூடாது v.m.j.gowsi

என் உணர்வுகள்


உன்னுடனான என் பாசம் காதல்
நேசம் ஒன்றே உண்மை என்று
என்று எண்ணி வாழ்பவள்
இவள் ......
உன் வார்த்தையே எனக்கு சத்தியம்
உன் காதலே என் உணர்வுகள் v.m.j.gowsi

முகம் தெரியாத


உரையாடல் கைபேசியில் தொடர்ந்தது
காதலாய் மாறினாலும் காற்றலையில்
காதலித்தாலும் முகம் பார்க்காத போதும்
நாளடைவில் முகம் தெரியாது என்பதையே
மறந்து காதலித்தோம் இன்று முகம்
தெரிந்தாலும் முகம் தெரியாத அந்த
நாட்கள் எம்முன்னே வந்து போகின்றது
நம் ஒவ்வொரு உரையாடலின் போதும் v.m.j.gowsi

அறிவாயா ?


நீ எனக்கு தாலி கட்டி
வாழவில்லை
தாரம் என்று உன்னோடு
நான் வாழவில்லை
உன்னை நான் தாய்
எனவே சிந்தித்தேன்
எதிர்த்து உன்னை பேசிவிட்டும்
வலியால் துடிப்பேனே அறிவாயா ?
நீ என் தாயானவனே .......

உந்தன் நலம் ஒன்றே என் வாழ்வு
என்று வாழ்கிறேன் நீயோ என்
கண்களில் கண்ணீர் வரவைத்து
வாழ்கிறாய் உயிருள்ள என் கண்கள்
வலியால் துடிப்பதை எப்போது
நீ உணர்வாய் என் காதல்
உயிர் வாழுமா ?v.m.j.gowsi

என்னவனே


உலகை எதிர்க்கும் சக்தி
என்னிடம் இல்லை என்னவனே
காரணம் இன்னும் நான் உன்
தோல் சாய்ந்து நடக்கவில்லை
உன் தோல் சாய்ந்தால் இந்த
உலகையே எதிர்ப்பேனடா v.m.j.gowsi

புரிந்து கொள்


என்னுள் நீ புரிந்து கொள்ள
மறுப்பது ...என்னை அல்ல
உன்மீது நான் கொண்ட
உயிர் பாசத்தை .......
புரிந்து கொண்டால் நம்
பாசம் என்றும் மாறது v.m.j.gowsi

கண்ணீர்


கண்ணீர் சிந்தி காதல் கலந்து
ஆயிரம் கவி வடித்து விட்டேன்
இதுவரை உன் வருகை இல்லை
உன்னால் என் உயிர் மண்ணை
தொடலாம்v.m.j.gowsi

Tuesday, February 21, 2012

உயிரோடு அடக்கம் செய்யாதே


உன்னால் வஞ்சிக்க பட்ட
பாவி இவள் இதயம்
பாசமே பவித்திரம் என்று
வாழும் இதயமடா
உன் போலி நேசத்தால்
என் இதயத்தை உயிரோடு
அடக்கம் செய்யாதே v.m.j.gowsi